தென் சென்னை செய்திகள்

புதிய மசோதாவை வாபஸ் பெற வேண்டும்: அண்ணா ஹசாரே குழு வலியுறுத்தல்

காஸியாபாத், டிச.22: மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள லோக்பால் மசோதா மக்களுக்கு விரோதமானது மற்றும் அபாயகரமானது என அண்ணா ஹசாரே குழுவினர் தெரிவித்தனர். இந்த மசோதாவை நிராகரித்துள்ள ஹசாரே குழுவினர், அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.சிபிஐயை சுதந்திரமான அமைப்பாகக் கொண்டுவரும் வகையில் புதிய மசோதாவை நாடாளுமன்றம் கொண்டுவர வேண்டும் என அவர்கள் கூறினர்.

தற்போதைய மசோதாவின்படி, லோக்பாலை மத்திய அரசு கட்டுப்படுத்த முடியும். அதன் உறுப்பினர்களை விருப்பப்படி நியமிக்கவோ, நீக்கவோ மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆகஸ்டில் அறிமுகப்படுத்தப்பட்ட லோக்பால் மசோதாவைவிட இது மோசமானது. இந்த புதிய மசோதாவை நிராகரிக்கிறோம். இதை வாபஸ் பெற்று புதிய மசோதாவை அறிமுகப்படுத்த வேண்டும் என கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.

10 சதவீத அரசியல்வாதிகள் மட்டுமே லோக்பால் வரம்புக்கு வெளியே உள்ளனர். 5 சதவீத அரசு ஊழியர்கள் மட்டுமே லோக்பால் வரம்புக்குள் உள்ளனர் என கெஜ்ரிவால் தெரிவித்தார்.

கோயில்கள், மசூதிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், கிரிக்கெட் கிளப்புகள், குருத்வாராக்கள், சுய உதவிக்குழுக்கள் அனைத்தும் லோக்பால் வரம்புக்குள் உள்ளன. அரசியல்வாதிகளையும், அரசு ஊழியர்களையும் தவிர அனைத்து குடிமகன்களும் ஊழல்வாதிகள் என அரசு கருதுகிறது என்பது இந்த மசோதாவின் மூலம் தெரியவந்துள்ளது என கெஜ்ரிவால் தெரிவித்தார்.

சென்னை வரும் பிரதமருக்கு கறுப்புக் கொடி- விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை வரும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கறுப்புக்கொடி காட்டப்படும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்ச நீதிமன்றத்தில் ஆய்வில் இருக்கும்போதே கேரள அரசு, வேண்டும் என்றே முல்லைப் பெரியாறு பிரச்சினையைக் கிளப்பியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.


மேலும் தமிழ்நாட்டு மக்களை வாட்டி வதைக்கும் போக்கினை மேற்கொண்டுவிட்டு, இந்திய அரசின் சின்னமாக தற்போது தமிழ்நாட்டுக்கு எந்த முகத்தோடு பிரதமர் வருகிறார் என்றும் விஜயகாந்த் கேள்வியெழுப்பியுள்ளார்.


எனவே முல்லைப் பெரியாறு பிரச்சினையை உடனடியாக நடுவண் அரசு தீர்க்க வலியுறுத்தி வரும் 25 மற்றும் 26-ந் தேதி சென்னை வரும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

முல்லை பெரியாறு அணை அரசியல் ஆக்கப்படுவது குறித்து உங்கள் கருத்து?

அரசியல் ஆக்குவது தவறு. - 50%
நல்ல உறவு நீடிக்க வேண்டும் - 50%
கருத்து கூற விரும்பவில்லை - 0%

Total votes: 6
The voting for this poll has ended on: 07 ஜன 2012 - 16:05

சிறப்பு இணைய தளங்கள்