தென் சென்னை செய்திகள்
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைக்குழு அமைத்த நடுவண் அரசுக்கு வைகோ கண்டனம்
கேரளத்தின் சதித்திட்டத்துக்கு நடுவண் அரசு உடந்தையாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள வைகோ, பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்த பிரதமருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பென்னிகுயிக் கட்டிய முல்லைப்பெரியாறு அணை எந்த நிலநடுக்கத்தையும் தாங்கக் கூடிய வகையில் வலுவாக உள்ளது என்றும், இந்நிலையில் பிரதமர் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்ய அறிவித்துள்ளது கேரளாவின் சதித்திட்டத்துக்கு, நடுவண் அரசு துணை நிற்பதற்கு ஒப்பானதாகும் என்று தெரிவித்துள்ள வைகோ, இதனைக் கண்டித்து பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை முல்லைப்பெரியாறு அணை குறித்து ஆய்வு செய்ய பிரதமர் நியமித்துள்ளது, தமிழ்நாட்டுக்கு இந்திய அரசு செய்துள்ள பொறுக்க முடியாத மேலும் ஒரு அநீதியாகும் என்றும், இது மிகவும் அதிர்ச்சியளிக்கின்றது என்றும் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போது அணையின் வலிமை உள்ளிட்ட நிலைமையை உச்சநீதிமன்றம் ஆய்வு செய்து வரும் நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக்குழுவை அமைத்துள்ளது, நடுவண் அரசு கேரளாவின் சொல்படிதான் செயல்படுகின்றது என்பதை வெட்டவெளிச்சமாக்குகின்றது என்றும் வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தேசிய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைக்குழுவை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழக முதல்வர் நியாயமான வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், நடுவண் அரசு இந்த ஆணையத்தை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும் என்றும் வைகோ தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Bruno
Posted at 2012-02-10 20:36:53
I cannot tell a lie, that raelly helped.
Reply to comment