தென் சென்னை செய்திகள்

திகார் ஜெயிலில் பாசக் கிளிகள்-தங்கையை சந்திக்கிறார் அண்ணன்

ஜூன் 27: 2ஜி அலைகற்றை முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை மாலை சந்தித்துப் பேசினார்.

தில்லிக்கு திங்கள்கிழமை காலையில் ஸ்டாலின் வந்தார். அவருடன் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன், மாநிலங்களவை உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி ஆகியோரும் வந்தனர். விமான நிலையத்திலிருந்து சாணக்கியபுரியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு ஸ்டாலின் காரில் சென்றார். மாலையில் திகார் சிறைச்சாலைக்கு வந்த அவர், கனிமொழியை சந்திப்பதற்காக அங்குள்ள 6-ம் எண் சிறைக்குச் சென்றார். அப்போது முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவின் மனைவி பரமேஸ்வரி, கனிமொழியைச் சந்தித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். ஸ்டாலினைப் பார்த்த அவர் வணக்கம் தெரிவித்துக் கொண்டார். பின்னர் கனிமொழியைச் சந்தித்த ஸ்டாலின், அவருடன் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஆறுதலான வார்த்தைகளை அவர் கூறியதாகத் தெரிகிறது.

தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் சரத்குமாரை ஸ்டாலின் சந்தித்தார். இச்சந்திப்பு 20 நிமிடம் நீடித்தது. கனிமொழியைச் சந்திக்க திகார் சிறைக்கு ஸ்டாலின் சென்றபோது, திமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவர் டி.ஆர். பாலு, ஏ.கே.எஸ். விஜயன் எம்.பி. ஆகியோர் உடன் சென்றனர். இதற்கு முன் ஸ்டாலின் கடந்த மே மாதம் 24-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்து

முல்லை பெரியாறு அணை அரசியல் ஆக்கப்படுவது குறித்து உங்கள் கருத்து?

அரசியல் ஆக்குவது தவறு. - 50%
நல்ல உறவு நீடிக்க வேண்டும் - 50%
கருத்து கூற விரும்பவில்லை - 0%

Total votes: 6
The voting for this poll has ended on: 07 ஜன 2012 - 16:05

சிறப்பு இணைய தளங்கள்