சினிமா

கவர்ச்சியை ரசிப்பது பிடிக்காது! ராணி முகர்ஜி ஓப்பன் டாக்!!

என் கவர்ச்சியை ரசிகர்கள் ரசிப்பது எனக்கு பிடிக்கவில்லை, என்று பாலிவுட் கவர்ச்சிக் கன்னி என்று வர்ணிக்கப்படும் நடிகை ராணி முகர்ஜி கூறியுள்ளார். இந்தித் திரையுலக ரசிகர்களின் இதயங்களில் இப்போதும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருப்பவர் ராணி முகர்ஜி.

அவர் தனது சினிமா வாழ்க்கை குறித்து அளித்துள்ள பேட்டியில், 12ம் வகுப்பு படித்தபோது தயாரிப்பாளர் சலீம் அக்தர், `ராஜா ஆயேகி என்ற படத்தில் நடிக்க அழைத்தார். நடித்தேன். அதுதான் என் முதல் படம். என் முதல் படம் நன்றாக ஓடவில்லை. என் சினிமா வாழ்க்கை அதோடு முடிந்தது என்று தான் பலரும் நினைத்தார்கள். ஆனால் அடுத்து நான் அமீர்கானுடன் இணைந்து நடித்த, `குலாம் சக்கை போடு போட்டது. அதன் பிறகு மின்னல் வேகத்தில் வளர ஆரம்பித்தேன். அப்போதே எனக்கு `கவர்ச்சிக் கன்னி பட்டம் கொடுத்து விட்டார்கள்.

கவர்ச்சி நடிகையாக என்னை ரசிப்பது எனக்கு பிடிக்காது. அப்படிப்பட்ட புகழை நான் விரும்புவதில்லை. எனது குடும்பத்தினர் ஏற்கனவே பிரபலமானவர்கள். நடிப்பிற்காக எனக்கு கிடைக்கும் பாராட்டுகள் எதையும் நான் ஏற்றுக் கொள்வதில்லை.

டைரக்டர் சொல்கிறபடி நான் நடிக்கிறேன். அதனால், என் நடிப்பு நன்றாக இருந்தால் அந்த பாராட்டு டைரக்டருக்குத்தான் போய் சேரவேண்டும், என்று கூறியுள்ளார். வெற்றியின் ரகசியம் என்ன? என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கும் ராணி, `நான் இரவு பார்ட்டிகளுக்கு செல்வதில்லை. மது விருந்துகளில் கலந்துகொள்வதில்லை. எனக்கு எந்த நடிகர் மீதும் ஈர்ப்பும் இல்லை. எனது எல்லா கவனங்களும் நடிப்பில் மட்டுமே இருக்கிறது. அதுவே எனது வெற்றி ரகசியம் என்று கூறியிருக்கிறார்.

என் அக்கா சாவில் மர்மம் இருக்கிறது : சில்க் ஸ்மிதாவின் தம்பி மீண்டும் புகார்...!

என் அக்கா தற்‌கொலை செய்யவில்லை. அவர் சாவில் நிறைய மர்மம் இருக்கிறது. குடும்பபாங்கான கேரக்டரில் நடிக்க வந்த அவரை, கவர்ச்சி நடிகையாக்கவிட்டனர் என்று மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் தம்பி நாகவர பிரசாத் மீண்டும் புகார் தெரிவித்திருக்கிறார். 1980களில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. தன் அழகாலும், கவர்ச்சியான நடிப்பாலும் ரசிகர்களை ஈர்த்த சில்க் ஸ்மிதா, 1996-ல் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவில் மர்மம் இருக்கிறது. என் அக்கா தற்கொலை செய்யவில்லை என்று அப்போதே சில்க்கின் தம்பி நாகவர பிரசாத் புகார் கொடுத்தார். ஆனால் இது தற்கொலை தான் போலீசார் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு சில்க் ஸ்மிதாவை பிரதிபலிப்பது போன்று இந்தியில், டர்ட்டி பிக்சர்ஸ் என்ற படம் வெளியாகியுள்ளது.

இந்தபடம் எடுக்கும் போதே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் நாகவர பிரசாத். ஆனால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் தன் அக்கா சாவில் மர்மம் இருப்பதாக மீண்டும் புகார் கூறியிருக்கிறார் நாகவர பிரசாத். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், நானும், என் அக்கா சில்க் ஸ்மிதாவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்கள். சிறுவயதிலேயே எங்களை தவிக்கவிட்டு, எங்க அப்பா ஓடிவிட்டார். அக்காவுக்கு 17வயசு இருக்கும் போது அன்னபூர்ணம் என்ற பெண், அவரை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி சென்னைக்கு அழைத்து வந்தார். தொடர்ந்து அவர் சினிமாவில் வளர்ந்து முன்னணி நடிகையாக மாறினார். அவர் வளர்ந்து வந்த நேரத்தில் அவருக்கு சின்ன வயசில் திருமணம் ஆகிவிட்டது, கணவன் ஓடிவிட்டான் என்றெல்லாம் வதந்திகள் பரவியது. ஆனால் அதில் உண்மை கிடையாது.

திருமணமாகி குழந்தைகளுடன் இருந்த ஒருவர் திடீரென வந்து என் அக்காவுடன் ஒட்டிக்கொண்டார். கால்ஷீட் உள்ளிட்ட சினிமா சம்பந்தமான எல்லா வேலைகளையும் அவர்தான் கவனித்தார். அந்த நபரை சில்க் ஸ்மிதா ரொம்ப நம்பினார். ஒரு சமயம், ஒரு வீடு வாங்குவது தொடர்பாக என் அக்காவுக்கும், அந்த நபருக்கும் தகராறு ஏற்பட்டது. சாவதற்கு சில நாட்களுக்கு முன் எனது தாய் சென்னை சென்று சில்க் ஸ்மிதாவுடன் தங்கிவிட்டு வந்தார்.

அவர் வந்த மூன்றாவது நாள் சில்க் ஸ்மிதா மின்விசிறியில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்தது. நாங்கள் பதறியடித்து சென்னை வந்தோம். அப்போது எனது அக்கா கைப்பட எழுதியதாக ஒரு கடிதத்தை எங்களிடம் காண்பித்தனர். அதில் என் வாழ்க்கையில் நிறையபேர் விளையாடிவிட்டனர். இதனால் என் வாழ்க்கையே நாசமாகிவிட்டது என்று எழுதப்பட்டிருந்தது. உண்மையில் அந்த கடிதத்தில் இருந்த கையெழுத்து, என் அக்காவுடையது அல்ல. அவருடைய மரணத்‌தில் நிறைய மர்மம் இருக்கிறது. ஆனால் இதை கண்டறிய போலீசும் மறுக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் அலைகள் ஓய்வதில்லை போன்ற குடும்ப பாங்கான படத்தில்தான் சில்க் நடிக்க விரும்பினார். ஆனால் அவரை கவர்ச்சி நடிகையாக்கி விட்டனர் என்றார்.

உட்பிரிவுகள்

உங்கள் கருத்து

முல்லை பெரியாறு அணை அரசியல் ஆக்கப்படுவது குறித்து உங்கள் கருத்து?

அரசியல் ஆக்குவது தவறு. - 50%
நல்ல உறவு நீடிக்க வேண்டும் - 50%
கருத்து கூற விரும்பவில்லை - 0%

Total votes: 6
The voting for this poll has ended on: 07 ஜன 2012 - 16:05

சிறப்பு இணைய தளங்கள்